முல்லைப் பெரியாற்றில் இறங்கிய கள்ளழகர்; பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2025 10:05
தேனி; தேனி அருகே உப்பார்பட்டி கிராமத்தில் சேர்ந்த ஸ்ரீவரதராஜ பெருமாள் முல்லைப் பெரியாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மற்றும் உப்பார்பட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை திருவிழா கள்ளழகர் ஆண்டு தோறும் முல்லைப் பெரியாற்றில் இறங்கும் வைபோகம் நடைபெற்றது. பின்னர் முல்லைப் பெரியாற்று கரையில் இரு கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர் எதிர்சேவை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெறாது என கிராம கமிட்டி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த ஆண்டு உப்பார்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கள்ளழகர் பேட்டை பச்சை பட்டு உடுத்தி முல்லைப் பெரியாற்றில் இறங்கும் வைபோகம் மிகவும் சரியாக நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் கோவிந்தோ கோவிந்தோ என கோஷங்களை எழுப்பி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தை கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து உப்புக்கோட்டை முல்லைப் பெரியாற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் கள்ளழகர் இறக்கி வைத்தனர். உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி இரு கிராமத்தைச் சேர்ந்த 5000 - க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி இரு கிராமங்களில் இணைந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவை உப்பார்பட்டி கிராமம் மட்டுமே சேர்ந்த கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.