Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் சித்ரா பவுர்ணமியை ... வடமதுரை பெருமாள் கோயில்களில் சித்ரா பவுர்ணமி விழா வடமதுரை பெருமாள் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலாற்றில் இறங்கிய முகையூர் கள்ளழக பெருமாள்
எழுத்தின் அளவு:
பாலாற்றில் இறங்கிய முகையூர் கள்ளழக பெருமாள்

பதிவு செய்த நாள்

12 மே
2025
05:05

மாமல்லபுரம்; செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் அடுத்த முகையூரில், சுந்தரவல்லி தாயார் சமேத கள்ளழக பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இப்பகுதியினர் வடதிருமாலிருஞ்சோலை கோவிலாக வழிபடுகின்றனர். கள்ளழக பெருமாள், 2012 முதல், சித்திரை பவுர்ணமி வைபவமாக, பாலாற்றில் இறங்கி உற்சவம் கண்டு அருள்பாலிக்கிறார். இந்நாளான இன்று கள்ளழகர் கோலாகல உற்சவமாக ஆற்றில் இறங்கினார். காலை, கோவிலில் சுவாமிக்கு திருமஞ்சன வழிபாடு நடைபெற்றதைத் தொடர்ந்து, கள்ளழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, மேள, தாள இசை, பஜனை பாடல்கள் முழக்கத்துடன், கோவிலிலிருந்து புறப்பட்டார். கூவத்துார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை அடைந்து, ஆண்டாள் சூடிய மாலையை அவருக்கு அளித்து, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் புறப்பட்டு, வாயலுார் பாலாற்றை அடைந்தார். ஆற்றங்கரையில் திருமஞ்சன வழிபாட்டைத் தொடர்ந்து, ஆண்டாள் மாலையை அவருக்கு சூட்டி, வேத பாராயணம், இசை முழக்கத்துடன், காலை 10:00 மணிக்கு கள்ளழகர் ஆற்றில் இறங்கி உற்சவம் கண்டு அருள்பாலித்தார். பாலாற்று பாலத்தில் ஆற்றை கடந்து வேப்பஞ்சேரி, கூவத்துார், வடபட்டினம், தென்பட்டினம் பகுதிகள் வழியே, கோவிந்தா... கோவிந்தா... என, பக்தர்கள் முழங்கி, வீதியுலா சென்று கோவிலை அடைந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள பிராமண சபையின் மாநிலக் குழு சார்பில் நடத்தப்பட்டு வரும், ஸ்ரீ சங்கர சந்தேசா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar