திருப்பதி அன்னபிரசாதம் வளாகம் மற்றும் லட்டு கவுண்டர்களில் திடீர் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2025 11:05
திருமலை; மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாதம் வளாகம் மற்றும் லட்டு கவுண்டர்களை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திடீர் ஆய்வு செய்தார் தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு. முதலில் சமையல் செயல்முறை, சேமிப்பு மற்றும் தூய்மையை ஆய்வு செய்தார். பின்னர் பக்தர்களுடன் உரையாடி, அவர்களுக்கு வழங்கப்படும் அன்ன பிரசாதத்தின் தரம் குறித்து அவர்களின் கருத்துக்களைப் பெற்றார். அன்னபிரசாதத்தின் மேம்பட்ட தரம் குறித்து பக்தர்கள் மிகுந்த திருப்தி தெரிவித்தனர். அங்கிருந்து, TTD வாரியத் தலைவர் லட்டு கவுண்டர்களை ஆய்வு செய்து, வரிசைகள் மற்றும் லட்டு விநியோக செயல்முறையைச் சரிபார்த்தார். இதில் துணை நிர்வாக அதிகாரி ராஜேந்திர குமார் கலந்து கொண்டார்.