நயினார்கோவில் திருக்கொளுவூர் ஆதிநாகநாதர் கோயில் வசந்தவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2025 10:05
நயினார்கோவில்; பரமக்குடி அருகே நயினார்கோவில் திருக்கொளுவூர் ஆதிநாகநாதர் கோயில் வசந்தவிழா மே 31 கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. பரமக்குடி அருகே நயினார்கோவிலில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் திருக்கொளுவூர் உள்ளது. கூவிளபுரம் என பெயர் பெற்றதும், கூன்பாண்டியனுக்கு கூனலை தீர்த்ததும், அவர் கோயில் முன்பு குளம் வெட்டும்போது தங்க கொளுக்கள் கிடைக்கப் பெற்றதால் இத்தலம் திருக்கொளுவூர் என பெயர் பெற்றது. இங்கு தற்போது வரை சிவன், லிங்க வடிவில் புற்று மண் மேட்டிலேயே அருள்பாலிக்கிறார். மேலும் இங்கு புற்றடி மண் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் வசந்த விழா மே 31 காலை கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து, பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். ஜூன் 8 மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஜூன் 9 மாலை 5:00 மணிக்கு பூக்குழி இறங்குதல், ஜூன் 10 காலை பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். ஆதி நாகநாதர் கோயில் பரம்பரை இனாம் டிரஷ்டி ஸ்தானிகம் குமாரசாமி பட்டர், மணிகண்டன் பட்டர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.