பதிவு செய்த நாள்
24
மே
2025
10:05
குன்றத்துார்; குன்றத்துார் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், முகூர்த்த நாட்களில் 60க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கின்றன. இதனால், கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சிரமம் நேரிடுகிறது. இதை தவிர்க்க, மலையடிவாரத்தில் 2.95 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஆறு திருமண மண்டபங்கள் கட்டப்பட்டன. மண்டபத்தைச் சுற்றி சுவர், சாலை, ஆகியவை 2 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டன. இந்நிலையில், ஆறு மண்டபங்களை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர், நேற்று திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழு தலைவர் மனோகரன், குன்றத்துார் நகராட்சி தலைவர் சத்தியமூர்த்தி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதேபோல், வியாசர்பாடியில் உள்ள மரகதாம்பாள் உடனுறை ரவீஸ்வரர் கோவில் சன்னிதி தெருவில், 1 கோடி ரூபாயில் திருமண மண்டபம் கட்டப்பட்டது. இரண்டு மாடிகள் உடைய ‘ஏசி’ வசதியுடன் கூடிய இம்மண்டபம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறக்கப்பட்டது.