சோளிங்கர் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் ரோப்கார் சேவை இரண்டு நாள் ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2025 03:05
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இந்த மலைக்கோவிலுக்கு, 1,305 படிகள் கொண்ட மலைப்பாதை உள்ளது. கடந்தாண்டு ரோப்கார் சேவை துவக்கப்பட்டது. காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை ரோப்கார் இயங்கி வருகிறது. நாளொன்றுக்கு, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணிக்கின்றனர். ரோப்காரில் சென்று திரும்ப, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, ரோப்கார் சேவை வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் நிறுத்தப்படுகிறது. ரோப்கார் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நாட்களில், பக்தர்கள் படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.