பதிவு செய்த நாள்
24
மே
2025
04:05
காரைக்கால்; காரைக்காலில் விடுமுறை நாட்கள் என்பதால் சனீஸ்வர பகாவன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெர்ச்சி விழா மிகவிமர்ச்சியாக நடைபெறுகிறது. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினம் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று சனி பிரதோஷம் மற்றும் தொடர் விடுமுறை என்பதால் திருநள்ளாறு கோவிலுக்கு இன்று அதிகாலை முதல் சென்னை, சேலம், திருச்சி,கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்திலிருந்து பக்தர்கள் வருகைப்புரிந்தனர். முன்னதாக பக்தர்கள் அதிகாலையில் நளன் தீர்த்தத்தில் புனித நீராடி, பின்னர் கலிதீர்த்த விநாயகரை தரிசனம் செய்து சீதர்தேங்காய் உடைந்தனர். பின்னர் கோயிலில் எள் தீபம் ஏற்றி தங்களது தோஷம் நீங்க பிரார்த்தனை செய்தனர். கட்டண தரிசனம், தர்ம தரிசனம் என்று வரிசையாக சென்று பக்தர்கள், இரண்டு மணிநேரம் காத்திருந்து சனீஸ்வரனை தரிசனம் செய்தனர். கோடை வெயில் காரணமாக பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நீர்மோர், பிஸ்கட், தண்ணீர், அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி சீனியர் எஸ்.பி..லட்சுமி செளஜன்யா தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட போலீசார், தன்னர்வளர்கள் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.