Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் வைகாசி ... திருப்பரங்குன்றம் பாண்டுரங்கன் கோயில் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் திருப்பரங்குன்றம் பாண்டுரங்கன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியூரில் மகா தீர்த்த யாத்திரை ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
மாரியூரில் மகா தீர்த்த யாத்திரை ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

26 மே
2025
10:05

சாயல்குடி; மதுரை ஆலவாயர் அருள்பணி மன்றம் சார்பில் ஆன்மிக கோயில் பயணம் என்ற தலைப்பில் மாரியூரில் கடற்கரையில் சமுத்திர தீப ஆரத்தி நடந்தது. மதுரை ஆலவாயர் அருள்பணி மன்றம் சார்பில் ஆன்மிக கோயில் பயணம் என்ற தலைப்பில் சிவனடியார்கள் முக்கிய சிவன்கோயிலுக்கு சென்று அங்கு சிவபூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர். நேற்று மதுரையில் இருந்து ஆலவாயர் அருள்பணி மன்றத்தின் சிவனடியார் சிவாஜி சுவாமி தலைமையிலான குழுவினர்கள் மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலுக்கு வந்தடைந்தனர். காலையில் அங்குள்ள மாரியூர் மன்னார் வளைகுடா கடலில் உற்ஸவமூர்த்திக்கு அபிஷேக அலங்கார தீபாரதனை செய்தனர். கீழக்கரை அருகே உள்ள பாரதிநகர் விவேகானந்தபுரத்தில் உள்ள காந்தாரியம்மன் கோயிலில் சமுத்திர தீப ஆரத்தி நடந்தது. சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் முன்புறமுள்ள கடலில் சமுத்திர ஆரத்தியும், மதியம் தேவிபட்டினம், அரியமான் கடற்கரை, ராமேஸ்வரம் அருகே வில்லுண்டி தீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் சமுத்திர ஆரத்தி நடந்தது. திருவாசகம் உள்ளிட்ட பாடல்களை பாடினர். கைலாய வாத்தியம் முழங்கினர். ஏற்பாடுகளை மதுரை ஆலவாயர் அருட்பணி மன்றம் மற்றும் ராமேஸ்வரம் ராமசேது மகா சமுத்திர தீர்த்த ஆர்த்தி குழுவினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar