கோட்டையிருப்பு சூரமாகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2025 12:05
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் கோட்டையிருப்பில் சூரமாகாளியம்மன் கோயில் 54ம் ஆண்டு வைகாசி பொங்கல் விழா நடந்தது. இக்கோயிலில் விழாவை முன்னிட்டு வைகாசி முதல் செவ்வாய்க்கிழமையன்று கிராமத்தினர் காப்பு கட்டி விழாவை துவங்கினர். தொடர்ந்து, பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று 18ம் படி கருப்பர் கோயில் வீட்டு திடலில் சாமி ஆட்டம் நடந்தது. பின்னர் அங்கு கிடாய் பலி கொடுத்ததும், அங்கிருந்து கரகம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக சாமியாட்டத்துடன் ஊர்வலமாக சூரமாகாளியம்மன் கோவில் வந்தடைந்தனர். வழியில் பெண்கள் மஞ்சள்நீர் தெளித்தும், ஆண்கள் மாலை அணிவித்தும் வழிபாடு செய்தனர். கோவில் வளாகத்தில் பெண்கள் மாவிளக்கு வைத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.தொடர்ந்து சாமிக்கு பொங்கல் படையலிடப்பட்டது. தொடர்ந்து நடந்த தீபாராதனையை பக்தர்கள் தரிசித்தனர். கிராமத்தினர் ஏராளமானோர் நேத்திக்கடனாக சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டனர்.