Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் ... பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்சவம் துவக்கம் பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓதிமலை மடத்தில் சிவனேச அடிகளாருக்கு பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஓதிமலை மடத்தில் சிவனேச அடிகளாருக்கு பட்டாபிஷேகம்

பதிவு செய்த நாள்

31 மே
2025
02:05

மேட்டுப்பாளையம்; சிறுமுகை அருகே ஓதிமலை அடிவாரத்தில் உள்ள மடத்தில், சுந்தர சிவநேச அடிகளாருக்கு பட்டாபிஷேகம் விழா நடந்தது.


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே இரும்பறை ஓதிமலை மேல், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஐந்து முகத்தோற்றத்தில் முருகப்பெருமானின் கோவில் உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் சுந்தர சிவநேச அடிகளாரின் மடம் உள்ளது. இங்கு சுந்தர சிவநேசர் அடிகளார் திருமடம் திறப்பு விழா, சேக்கிழார் குருபூஜை விழா, பேரூர் அடிகள் 24ம் குருமகா சன்னிதானம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா, சிவநேச அடிகளார் சன்னிதானம் பட்டாபிஷேக விழா என நாற்பெரும் விழா நடந்தது.


நேற்று மங்கள இசை முழங்க கல்யாண சுந்தரம் ஓதுவார்கள் தலைமையில், திருமுறைப் பாராயணம், திருவிளக்கு ஆனைந்து, பெருமந்திருமகள் நிலத்தேவர் ஆகிய வழிபாடுகளுடன் விழா துவங்கியது. மாலையில் முதல்கால வேள்வி பூஜை நடந்தன. இன்று காலை இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. சின்னவேடம்பட்டி ஜெய்கணேஷ், கோவிந்தராஜ் ஆகியோர் இசை கலைஞர்களின் தலைமையில், 51 தவில், 51 நாதஸ்வரங்களின் இசையுடன் திருமடம் திறப்பு விழா, சேக்கிழார் குருபூஜை மலர் வழிபாடு, பேரூர் அடிகள் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு மலர் வழிபாடு ஆகியவை நடந்தன. அதைத் தொடர்ந்து குரு மகா சன்னிதானம் சிவநேச அடிகளாரின் பட்டாபிஷேக விழா நடந்தது. முன்னதாக சிவன், பார்வதி, விநாயகர், முருகர் ஆகிய சுவாமிகளுக்கும், மற்றும் சேக்கிழாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்த விழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் ராமனந்தா குமரகுருபர சுவாமிகள், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார், தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராம சுவாமி அடிகளார் உள்பட ஏராளமான ஆதீனம் அடிகளார்கள் பங்கேற்று அருளாசி வழங்கினர். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar