Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொங்கலூர் சிவ விஷ்ணு கோவிலில் ... எமனேஸ்வரத்தில் வைகாசி பிரம்மோற்ஸவ தேரோட்டம்; தீர்த்தவாரியுடன் விழா நிறைவு எமனேஸ்வரத்தில் வைகாசி பிரம்மோற்ஸவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் 5 உப கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் 5 உப கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2025
11:06

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேலுள்ள காசி விஸ்வநாதர் கோயில் உட்பட ஐந்து உப கோயில்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடக்கிறது. முதல் கட்டமாக உபகோயில்களான சொக்கநாதர் கோயில், பழனி ஆண்டவர் கோயில், பாம்பலம்மன் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில்களில் அறங்காவலர் குழுவினர் செலவில் ஏப். 16ல் கும்பிஷேகம் நடந்தது.


இரண்டாம் கட்டமாக மலை மேல் உள்ள காசி விசுவநாதர் கோயில், சரவணப் பொய்கை ஆறுமுக நயினார் சுவாமி கோயில், மலைக்குப் பின்புறம் பால் சுனை கண்ட சிவபெருமான் கோயில், சப்த கன்னிமார் கோயில், படிக்கட்டு விநாயகர் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு மே 4ல் பாலாலயம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம்: ஐந்து உப கோயில்களிலும்‌ நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. காலை 5:55 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட குடங்களில் இருந்த புனித நீர் காசி விஸ்வநாதர் கோயில் விமானம், முருகன் கோயில் விமானங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆறுமுக நைனார் சுவாமி கோயில், படிக்கட்டு விநாயகர் கோயில் விமானங்கள், பால் சுனை கண்ட சிவபெருமான் கோயில் மூலவர், சப்த கன்னிமார் கோயில் மூவலர்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்மதேவன், ராமையா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், மதுரை தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar