எமனேஸ்வரத்தில் வைகாசி பிரம்மோற்ஸவ தேரோட்டம்; தீர்த்தவாரியுடன் விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2025 11:06
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழாவில் தேரோட்டம் நடந்தது.
எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் 223 வது வைகாசி பிரம்மோற்ஸவ விழா நடந்தது. மே 31 அன்று கருட கொடியேற்றப்பட்டு விழா துவங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி வலம் வந்தார். முக்கிய விழாவாக ஜூன் 7 ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் திருக்கல்யாணம் நடந்தது. ஜூன் 8 மாலை 4:30 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் ரத வீதிகளில் வலம் வந்த பெருமாளுக்கு ஏராளமானோர் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 9:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. பின்னர் கோயிலில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இன்று காலை 9:30 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்தனர்.