Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி ... மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம் மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோமலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
சோமலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2025
12:06

மேட்டுப்பாளையம்: தோலம்பாளையத்தில் உள்ள சோமேஸ்வரி உடனமர் சோமலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.


காரமடை அடுத்த தோலாம்பாளையத்தில் புதிதாக, சோமேஸ்வரி உடனமர் சோமலிங்கேஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில் விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், காலபைரவர், வீரமாஸ்தியம்மன் ஆகிய சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. கோவில் கும்பாபிஷேக விழா மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. சர்வ சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, தீர்த்த குடங்கள், கோபுர கலசங்கள் மற்றும் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்பு முதல் கால வேள்வி பூஜை துவங்கியது. இரண்டாம் நாள் இரண்டாம் கால வேள்வி பூஜையும், சோமலிங்கேஸ்வரர், சோமேஸ்வரி மற்றும் பரிவார் மூர்த்திகளுக்கும், கோபுர கலசத்திற்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும், 1008 அர்ச்சனையும் செய்யப்பட்டது. மூன்றாம் நாள் நான்காம் கால யாக பூஜையும், கோபுர கலசம் அமைத்தலும், மூலவர் மற்றும் பரிவார் மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் மருந்து சாத்துதலும், மாலையில் ஐந்தாம் யாக வேள்வி பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து நான்காம் நாள் ஆறாம் கால வேள்வி பூஜையும், யாகசாலையில் இருந்து மூலவர் சன்னதிக்கு சக்தியை ஏற்றுதல் ஆகிய பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து யாக சாலையிலிருந்து தீர்த்து குடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து, கோபுர கலசத்திற்கும், சோமேஸ்வரி உடனமர் சோமேஸ்வரருக்கும், பரிவார் மூர்த்திகளுக்கும் தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மகா அபிஷேகமும், அலங்கார பூஜை, தீபாரதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. யாக வேள்வி பூஜைகளை அஸ்வின் சிவாச்சாரியார் குழுவினர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை சோமகவுடர் மலவீர் குல மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar