திருப்பதியில் உள்ள அன்னமாசார்ய கலாமந்திரத்தில் கடந்த புதன்கிழமை, 12 மணி நேரம் இடைவிடாது நடைபெற்ற உபநிஷத் போதனைச் சொற்பொழிவு லண்டனின் உள்ள இண்டர்நேஷனல் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை தேசிய கீதை பரப்புரை குழுவும்,திருமலை திருப்பதி தேவஸ்தானமும் இணைந்து நடத்தியது. உபநிஷத்களில் ஆழ்ந்த புலமை பெற்ற அறிஞராகிய ஸ்ரீ பொன்னா கிருஷ்ணமூர்த்தி, காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சொற்பொழிவை வழங்கினார். தனது சொற்பொழிவில் தைத்திரிய உபநிஷத்,மாண்டூக்கிய உபநிஷத், பிரச்ன உபநிஷத், கேன உபநிஷத், ஐதரேய உபநிஷத், கத உபநிஷத் ஆகிய உபநிஷத்துகளில் இருந்து கருத்துக்களை வழங்கினார். நிகழ்வில் கீதா குழு பிரதிநிதிகள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள்,ராமகிருஷ்ண மடம் மற்றும் லலிதா பீடத்தின் பண்டிதர்கள் பலர் கலந்து கொண்டனர்.வேதாந்தத்தின் ஆழமான சிந்தனைகளை பொது மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.