சேதுவராயநல்லூர் வெளிக்காட்டம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2025 12:06
செஞ்சி; சேதுவராயநல்லூர் வெளிக்காட்டு அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
செஞ்சி அடுத்து சேதுவராயநல்லூர் வெளிக்காட்டு அம்மன் பாலமுருகன் கோவில் கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமம் நடந்தது. 12 மணிக்கு விக்ரகங்கள் கரிக்கோல ஊர்வலம் நடந்தது. மாலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், 6 மணிக்கு வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, விசேஷ திரவிய ஹோமமும், இரவு 8.30 மணிக்கு யந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு கோபூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 9.15 மணிக்கு மகாபூர்ணாஹூதியும், 9.30 மணிக்கு யாத்ரா தானமும், கடம்புறப்பாடும் 9.45 வெளிக்காட்டம்மனுக்கும், 10 மணிக்கும் பாலமுருகனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகமும், அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.