பதிவு செய்த நாள்
03
ஜூலை
2025
11:07
சென்னை; ‘திருச்செந்துார் முருகன்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, சென்னை உட்பட பல்வேறு இடங்களிலிருந்து, 80 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விரைவு போக்குவரத்து நிர்வாக இயக்குனர் மோகன் வெளியிட்ட அறிக்கை: திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகம், ஜூலை 7ம் தேதி நடக்க உள்ளது. அதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், 80 சிறப்பு விரைவு பஸ்கள் இயக்கப்படும். சென்னை, திருச்சி, புதுச்சேரி, கும்பகோணம், சேலம், பெங்களூரு, தஞ்சாவூர், கோவை, ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்துாருக்கு, ஜூலை 4 முதல் 6ம் தேதி வரையும், திருச்செந்துாரில் இருந்து 7ம் தேதி, பக்தர்கள் ஊர்களுக்கு திரும்பி வருவதற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க, அனைத்து பஸ் நிலையங்களிலும், போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர். பக்தர்கள் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in இணையதளம் மற்றும் ‘tnstc’ செயலி வாயிலாக, முன்பதிவு செய்து பயணிக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.