பதிவு செய்த நாள்
03
ஜூலை
2025
12:07
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் கால யாகசாலை பூஜை இன்று காலை நடந்தது. தங்கத்தகடுகள் பதிக்கப்பட்ட சுவாமி சண்முகர் விமான கலசத்தை வைத்து பூஜைகள் நடந்தன.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கோவில் கும்பாபிஷேகம் வரும் 7 ல் காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக ராஜகோபுர வாசல் அருகே 8,000 சதுர அடி பரப்பளவில், 76 குண்டங்களுடன் பிரம்மாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. 2,000 பக்தர்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னிட்டு நான்காம் கால யாகசாலை பூஜை இன்று காலை நடந்தது. தங்கத்தகடுகள் பதிக்கப்பட்ட சுவாமி சண்முகர் விமான கலசத்தை வைத்து பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் மற்றும் விமான கும்பாபிஷேகம் தமிழில் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் முன்பகுதி மலர்களாலும், வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருச்செந்துார் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.