நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2025 03:07
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கோமாதா பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோமாதா பூஜை நடப்பது வழக்கம். இதற்காக கன்றுடன் கூடிய பசு மாட்டை அருகில் பசு வளர்ப்பவர்களிடம் இருந்து ஓட்டி வந்து பூஜை செய்வார்கள். ராஜேந்திரகுமார் போரா, மஞ்சுளாபாய் தம்பதியினர் கோவிலுக்கு கன்றுடன் கூடிய பசு மாட்டை தானமாக வழங்கினர். இன்று காலை பசுவை குளிக்க வைத்து கோமாதா பூஜை செய்தனர். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.