கோவை, ஈஷா, ஆதியோகியில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவருமான மாணிக்கவாசகருக்கு விழா எடுத்துக் கொண்டாடப்பட்டது; பக்தர்கள் புடை சூழ, கைலாய வாத்தியம் முழங்க மாணிக்கவாசகர் திருமேனி உலா நடந்தது; மாணிக்கவாசகர் திருமேனிக்கு அபிஷேக, ஆராதனைகளும் நடந்தன; நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.