மீனாட்சி சுந்தரேசர் பெருமாள் கோவிலில் ஆனி திருகல்யாண வைபோகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2025 10:07
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள பெருமாள் கோவிலில் ஆணி திருமஞ்சனத்தையொட்டி சாமிக்கு திருகல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மேல்தனியாலம்பட்டு கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர் பெருமாள் கோவிலில் ஆணி திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி தீபாரதனை காட்டப்பட்டது. தொடர்ந்து உற்சவருக்கு திருகல்யாணம் நடந்தது. மேல்தனியாலம்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இறுதியாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.