புதுச்சேரி, பிள்ளைச்சாவடி மீனவர் பகுதியில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் கடந்த 4ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தனபூஜை, நவகிரஹ ஹோமம், வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக, நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, திரவியஹூதி, பூர்ணாஹூதி, யாத்ர தானம், கலச புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம், சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில் கெங்கையம்மன் விமான கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதில், கவர்னர் கைலாஷ்நாதன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருப்பணிக்குழு, கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.