Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி தர்மராஜர் சுவாமி கோவிலில் ... கெங்கையம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்  கவர்னர் பங்கேற்பு கெங்கையம்மன் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி  திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2025
12:07

பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற பெரியகுளம் தென்கரை கவுமாரியம்மன் கோயில் ஆண்டு தோறும் ஆனித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். திருவிழாவிற்காக ஜூன் 16ல் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. ஜூலை 1ல் கம்பம் நடப்பட்டது.நேற்று சிங்கம் முகம் வரைந்த கொடி ஏற்றப்பட்டது.


கோயிலில் கும்பாபிஷேகம் திருப்பணிகள் நடந்து வருவதால், கொடி மரத்தில் முழுமையாக செல்லாமல் குறிப்பிட்ட தூரத்தில் கொடி நிலை நிறுத்தப்பட்டது. முன்னதாக கொடிமரத்திற்கு பால், தயிர், பன்னீர், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் பூஜாரிகள் அபிஷேகம் நடத்தினர். நேற்று முதல் ஜூலை 16 வரை பத்து நாட்கள் திருவிழா நடக்கும். தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார். கொடியேற்றம் நிகழ்ச்சியில் வர்த்தக சங்க தலைவர் சிதம்பர சூரியவேலு, முன்னாள் தாசில்தார் பாலசுந்தரம், கண்ணன், சிவக்குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 
temple news
சூலூர்: மழை வளம் பெருக வேண்டி, விநாயகர், கிருஷ்ணருக்கு பொங்கல் வைத்து கிராமங்களில் வழிபாடு நடந்தது.பருவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar