காரைக்குடியில் குஜராத் காளைகள் பூட்டிய ரதத்தில் இஸ்கான் ரதயாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2025 11:07
காரைக்குடி; காரைக்குடியில், நடந்த (அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) இஸ்கான் பாதயாத்திரையில் ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர்.
உலக நன்மைக்காகவும், பகவத் கீதை மற்றும் ஹரே கிருஷ்ணா மந்திரத்தை மக்களிடம் பரப்பவும் இஸ்கான் என்ற அமைப்பு தமிழக முழுவதும் பாதையாத்திரை மேற்கொண்டுள்ளது. குஜராத் காளைகள் பூட்டிய பிரம்மாண்ட ரதத்தில், கிருஷ்ணரும் பலராமரும் அமர்ந்தபடி சிலைகள் உள்ளது. திருநெல்வேலியில் தொடங்கி தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடைபெறுகிறது. காரைக்குடி வந்தடைந்த யாத்திரை குழு, காரைக்குடி இஸ்கான் அமைப்புடன் இணைந்து நேற்று ரத ஊர்வலம் நடந்தது. காரைக்குடி நகர் முழுவதும் யாத்திரை நடந்தது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ரதத்தில் பூட்டப்பட்ட பிரம்மாண்ட குஜராத் காளைகளை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ரதத்தில் தத்ரூபமாக இருந்த கிருஷ்ணர் பலராமரை சிலைகளை பக்தர்கள் பத்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.