திருப்பரங்குன்றம் கோயில் மூலவர்கள் நிலைகளில் வெள்ளி தகடுகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2025 04:07
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர்கள் முன்புள்ள நிலைகளில் வெள்ளி தகடுகள் பொருத்தும் பணி நடக்கிறது.
மூலவர் சுப்பிரமணிய சுவாமி முன்புள்ள நிலையில் ஏற்கனவே தங்க தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மற்ற மூலவர்களான கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் சன்னதிகளின் முன்பு உள்ள நிலைகளில் உபயதாரர்மூலம் வெள்ளி தகடுகள் பொருத்தப்படுகிறது. தவிர கோயிலிலுள்ள அனைத்து மண்டபங்களிலும் ஏற்கனவே இருந்த மின்விளக்குகளை காட்டிலும் கூடுதலாக 300க்கும் மேற்பட்ட டியூப் லைட்டுகள் பொருத்தப்பட்டு இரவிலும் மண்டபங்கள் பகல் போல் ஜொலிக்கின்றன. ஏற்கனவே இருந்த கண்காணிப்பு கேமராக்களுடன் கூடுதலாக 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. மூலஸ்தானத்திலுள்ள பக்தர்கள் உள்ளே நுழையும் பகுதியிலுள்ள பித்தளை கதவில் சேவல் உருவமும், வெளியேறும் பகுதியிலுள்ள பித்தளை கதவில் மயிலின் உருவமும் கலர் பெயிண்ட்டால் வரையப்படுகிறது.