வேத நாராயண பெருமாள் கோவிலில் தருமபுர ஆதீனம் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2025 04:07
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி வேத நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக யாக சாலை பூஜையில் தருமபுரம் ஆதீனம் சுவாி தரிசனம் செய்தார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி கிராமத்தில் வேத நாராயண பெருமாள சசேத கமலவள்ளி தாயார் கோவில் கும்பாபிஷேகம் நாளை (13ம் தேதியும்) பாலாம்பிகை சமேத வானவகோடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 14ம் தேதியும் நடக்கிறது. இரு கோவில்களிலும் யாக சாலை பூஜைகள் நடந்து வருகிறது. தருமபுரம் ஆதீனம் 27 குரு ஸ்ரீலஸ்ரீகயிலை மாசிலாமணி தேசிகர் பிறந்த ஊரான வளையமாதேவியில் இன்று வேத நாராயண பெருமாள் கோவில் யாக சாலை பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, வானவ கோடீஸ்வரர் கோவில் யாக சாலை பூஜையில் சுவாமி தரிசனம் செய்தார். தருமபுரம் ஆதீனம் பிறந்த ஊரான வளையமாதேவியில் புதிதாக கட்டளை மடம் கட்டப்பட்டு கிரக பிரவேசம் செய்யப்பட்டுள்ளது.தருமபுரம் ஆதினம் 27 குரு ஸ்ரீலஸ்ரீகயிலை மாசிலாமணி தேசிகர் நேற்று வளையமாதேவி புதிய ஆதின மடத்தில் மூன்றுநாட்கள் தங்கியுள்ளார். இன்று காலை 10.30 மணியளவில் வேதராயணபெருமாள் கோவிலில் நடந்து வரும் யாக சாலையை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர். காலை 11.00 மணியளவில் வானவகோடீஸ்வரர் ஆலயத்தில் நடந்து வரும் யாகசாலையை ஆய்வு செய்து அங்கு சாமி தரிசனம் செய்தார்.