கோவை; சிவராம்நகரில் எழுந்தருளியுள்ள பிரசன்ன விநாயகர் உள்ளிட்ட ஏழு சுவாமி கோவில்களுக்கு மஹாகும்பாபிஷேக விழா பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது. ராமநாதபுரம் உக்கடம் இடையேயான சுங்கம் பைபாஸ் சாலை சிவராம்நாகரில் எழுந்தருளியுள்ள பிரசன்ன விநாயகர், பார்வதி பரமேஸ்வரன், லட்சுமிநாராயணன், ஆஞ்சநேயர், ஐயப்பசுவாமி, வள்ளி தேவசேனா உடனமர் முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, துர்கை அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை 7 மணிக்கு நடந்தது. முன்னதாக கடந்த ஜூலை 12 அன்று காலை 8:30 மணிக்கு விநாயகர் வழிபாடு புண்யாகவசனம்,பஞ்சகவ்யம், கோபூஜை, கங்காபூஜை யாகசாலை பிரவேசம் ஆகியவை நடந்தது. மாலை 5:30 மணிக்கு கணபதி ஹோமமும், மஹாசங்கல்பமும், விக்ரஹஅபிஷேகமும், மாலை 6 மணிக்கு விமானகலசம் நிறுவுதலும், வாஸ்துசாந்தி, சுதர்சனஹோமம், பூர்ணாஹூதி அஷ்டபந்தன மருந்து சாத்துதல், தீபாரதனை பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு கணபதிஹோமம், 7 மணிக்கு கலசயாத்திரை, மஹாகும்பாபிஷேகம், காலை 9:30 மணிக்கு தசதரிசனம், 10 மணிக்கு மஹா அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.