திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2025 04:07
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள் பலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெர்ச்சி விழா மிகவிமர்ச்சியாக நடைபெறுகிறது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினம் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று ஆடி முதல் சனியை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலுக்கு பக்தர்கள் அதிகாலையில் சென்னை, சேலம், திருச்சி,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலத்திலிருந்து பக்தர்கள் வருகைப்புரிந்தனர். முன்னதாக சனி பகவான் சிறப்பு அபிஷேகம் மற்றும் வெள்ளி கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். பின்னர் பக்தர்கள் அதிகாலையிலிருந்து நளன் தீர்த்தத்தில் புனித நீராடி பின்னர் கலிதீர்த்த விநாயகரை தரிசனம் செய்து பின்னர் சீதர் தேங்காய் உடைந்தனர். பின்னர் கோயிலில் எள் தீபம் ஏற்றி தங்களது தேஷங்கள் நிறைவேற்றினார்.பக்தர்கள் கட்டணதரிசனம், தர்மதரிசனம் என்று வரிசையாக சென்று பகவான் சன்னதி ஒரோ இடத்தில் இரண்டு மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் பகவானை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பாதுகாப்பு நலன்கருதி சீனியர் எஸ்.பி..லட்சுமி செளஜன்யா தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட போலீசார், தன்னர்வளர்கள் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.