மேட்டுப்பாளையம்; ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் அனுமந்தராயசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக காலையில் பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, லோக சேமம் வேண்டி சங்கல்பம் செய்யப்பட்டது. தொடர்ந்து மண்டபத்தில் பாச்சானூர் குமரன், வள்ளி கும்மி கிராமிய கலை குழுவினரின் வள்ளி கும்மி கலை நிகழ்ச்சி நடந்தது. காரமடை மேற்கு வட்டார பஜனை குழுவின் சார்பில் பக்தி பாடல்கள் பஜனை பாடப்பட்டது. பூஜைகளை ஸ்ரீனிவாசன் அர்ச்சகர் மேற்கொண்டார்.