வேளச்சேரி, முத்துமாரியம்மன் கோவிலில், 28ம் ஆண்டு தீமிதி திருவிழா, 10ம் தேதி துவங்கியது. பந்தக்கால் நடுதல், அம்மனுக்கு காப்பு கட்டுதல், பால்குடம் எடுத்தல், பதிவிளக்கு பூஜை, பால் அபிஷேகம், அம்மன் கரகம் திருவீதி உலா, நாடகம் போன்ற நிகழ்வுகள் நடந்தன. கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு, தீமிதி விழா நடந்தது. இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, பட்டாசு வெடித்து வாண வேடிக்கை நடந்தது. இவ்விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.