திருமலை திருப்பதியில் பாரம்பரிய பல்லவோத்ஸவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2025 10:07
திருப்பதி; திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ல்லவோத்ஸவத்தை திருப்பதி தேவஸ்தானம் நடத்துவது ஒரு பாரம்பரியமாகும். அதன் படி நேற்று சஹஸ்ர தீப அலங்கர சேவைக்குப் பிறகு, ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், கர்நாடக சத்திரத்திற்கு ஊர்வலமாக சென்றனர். கர்நாடக மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் மைசூர் மாநில பிரதிநிதிகள் சுவாமி மற்றும் அம்மாவருக்கு அழைப்பு விடுத்து சிறப்பு ஆரத்தி செய்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, வாரிய உறுப்பினர்கள் ஜங்கா கிருஷ்ணமூர்த்தி, நரேஷ், துணை அலுவலர் லோகநாதம், பேஷ்கர் ராம கிருஷ்ணா மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.