பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவம் கடந்த 19ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை உற்சவருக்கு திருமஞ்சனம், பெருமாள், தாயார், சயன நரசிம்மர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பவித்ரம் சாற்றுதல், மாலை உற்சவர் உபயநாச்சியாருடன் ஊஞ்சல் சேவை நடந்தது. நேற்று காலை அஷ்டோத்ர கலச திருமஞ்சனம், மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடு, வேத பிரபந்த சாற்றுமுறை, மாலை உற்சவர் உபயநாச்சியாருடன் சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடு நடந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.