கன்வர் யாத்திரை நிறைவு; புனித கங்கை நதியில் நீராட குவிந்த சிவ பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2025 04:07
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கங்கை நதியில் இருந்து புனித நீரை சேகரிக்க, கன்வர் யாத்திரை மேற்கொள்கின்றனர்.அவர்கள் பாதயாத்திரையாக சென்று கங்கை நீரை சேமித்து, தங்களுடைய ஊரில் உள்ள கோவில்களில் வழிபாடு செய்வர். இன்று ஷ்ரவன் சிவராத்திரி மற்றும் கன்வர் யாத்திரையின் கடைசி நாள் என்பதால் ஹரித்வார் நகரில் ஏராளமான பக்தர்கள் புனித கங்கை நதியில் நீராடி சிவ தரிசனம் செய்தனர். உத்தரகண்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு, முசாபர்நகர் வழியாகவே பக்தர்கள் பயணம் செய்வர். இதையடுத்து, இம்மாவட்டத்தில் 50 கி.மீ., துாரத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.