Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசிக்க ... நெல்லிக்குப்பம் புத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நெல்லிக்குப்பம் புத்து மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவம்; ஆக. 1ல் கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவம்; ஆக. 1ல் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2025
03:07

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவம் ஆக., 1 அன்று கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.


பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பரமசுவாமி அருள்பாலிக்கிறார். ஆண்டு முழுவதும் மதுரை அழகர் கோவிலுக்கு இணையாக உற்சவங்கள் நடக்கிறது. பரமக்குடியின் அழகர் கோயில் என அழைக்கப்படும் நிலையில், ஜூலை 31 இரவு அணுக்கையுடன் விழா துவங்குகிறது. ஆக., 1 காலை 9:15 க்கு கொடி மரத்தில் கருட கொடியேற்றப்படும். இரவு அன்ன வாகனத்தில் பெருமாள் வீதி உலா வருகிறார். தினமும் பெருமாள் சிம்ம, சேஷ, கருட, அனுமார் வாகனங்களில் எழுந்தருளுவார். ஆக., 6 இரவு யானை வாகனத்தில் பெருமாள் புறப்பாடாகி, ஆண்டாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. திருமண வரம், குழந்தை பேறு வேண்டுவோர் நேர்த்திக்கடன் செலுத்துவர். மறுநாள் பூ பல்லக்கில் பவனி வருவார். ஆக., 8 காலை தவழும் கண்ணனாக முத்து பல்லக்கில் உலா வந்து வைகை ஆற்றில் இறங்குவார். அன்று வைகையில் பவுர்ணமி நிலா ஒளியில் இரவு 11:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி திருக்கோயிலை அடைவார். மறுநாள் காலை ஆடி தேரோட்டம் நடக்கிறது. ஆக., 10 காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar