திருப்பரங்குன்றம்; உலக நன்மை, மாணவியர் படிப்பு சிறக்க வேண்டி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அனுஷாதேவி அறக்கட்டளைச் சார்பில் 1008 விளக்கு பூஜை நடந்தது. திருமங்கலம் வி.எஸ்.ஆர். குரூப்ஸ் நிர்வாகி அமுதாராணி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அருக்கட்டளை உபயதாரர் மஹாலட்சுமி தர்மராஜ், கல்லூரி தலைவர் விஜயராகவன், உபதலைவர் ஜெயராம், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி, உதவி செயலாளர் சுரேந்திரன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குநர் பிரபு, ஆட்சிக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். 1008 மாணவியர் விளக்கு பூஜை செய்தனர். பேராசிரியர்கள் விஷ்ணுசுபா, பரிமளா ஒருங்கிணைத்தனர்.