சில புராணங்களில் அம்பாளை உயர்வாகவும், சிலவற்றில் சிவனை உயர்வாகவும் கூறியிருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2012 12:12
அம்பாள், சிவன், விஷ்ணு என எப்படி வழிபட்டாலும் ஒரே பரம்பொருளையே நாம் வெவ்வேறு வடிவம், பெயர்களில் வழிபடுகிறோம். சிலருக்கு தாங்கள் வழிபடும் தெய்வமே உயர்ந்தது என்ற மனநிலை வந்து விடுகிறது. அதற்கு புராணக்கதைகளும் காரணமாக அமைந்தது உண்மையே. உண்மையில், சக்தியும் சிவமும் உயிரும் உடலும் போல. ஒன்றை விட்டு ஒன்று இயங்குவதில்லை. இறைவன் ஒருவன் தான். அவனை நம் திருப்திக்காக பல பெயர்களில் வணங்குகிறோம்.