தனலட்சுமி அலங்காரத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2025 03:11
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் 17 ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் காலை, இரவில் அம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவில் இன்று தனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்ரத்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையொட்டி அனைத்து ஆர்ஜித சேவைகளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.