கோவை கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் 108 சுவாசினி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2025 05:08
கோவை ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் ஸ்ரீ வேத வியாச பூஜை மற்றும் சாதூர் மாஸ்ய விரத மகோத்சவ நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்வில் பிலாஸ்பூர் ஸ்ரீ சக்கர மகாமேரு பீடத்தின் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவரின் பரம சீடர் சச்சிதானந்த மகா ஸ்வாமிகள் நடத்தி வருகிறார். இதில் முக்கிய நிகழ்வாக 108 சுவாசினிபூஜை நடைபெற்றது.இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமங்கலி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது.இந்த நிகழ்வையொட்டி வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.