திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் செருத்துணை நாயனார் குரு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2025 11:08
சென்னை; திருவொற்றியூர் ஸ்ரீஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் சன்னதி அருகில் அருள்பாலிக்கும் 63 நாயன்மார்களில் ஒருவரான செருத்துணை நாயனார் குருபூஜை இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.
செருத்துணை நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இவர் இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்ட சேனாதிபதியாக நரசிம்ம பல்லவரிடம் பணியாற்றினார். காவிரி வளநாட்டில் திருச்செங்கோட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். இவர் ஆயுள் வேதக்கலையிலும் (மருத்துவம்), வடநூற்கலையிலும், படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர்; யானையேற்றம், குதிரையேற்றம், ஆகியவற்றிலும் வல்லவர். உள்ளம் நிறைந்த கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றதனால், சிவன்கழலைச் சிந்தித்துப் போற்றுதலே மெய்ந்நெறியாவதெனத் தெளிந்தவர். ஈசனடியார்க்குப் பணிசெய்தலை இயல்பாகக் கொண்டவர். இவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு, முன்னதாக சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சாமிர்தம், தேன், பால், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் இளநீர், பன்னீர் ஆகியவளால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பின்னர் தூப தீப ஆராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன