பழநி; பழநி முருகன் கோயில் ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணி நிறைவடைந்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு நேற்று முதல் இயக்கப்பட்டது.
பழநி முருகன் கோயில் சென்று வர படிப்பாதை, வின்ச், ரோப் கார் சேவைகளை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மூன்று நிமிடத்திற்குள் மலை கோயிலுக்கு சென்று வர ரோப்கார் சேவை பயன்படுகிறது. ஜூலை 15, லிருந்து ரோப் கார் நிறுத்தப்பட்டு, வருடாந்திர பராமரிப்பு 36 நாட்கள் பணிகள் நடைபெற்றது. ரோப் கார் பெட்டிகள், ரோப் உறுதித்தன்மை ஆய்வு, பழுதடைந்த பாகங்கள், தேய்மானமான பொருட்கள், சாப்ட்கள் ஆகியவை சரி செய்யப்பட்டன. எடைக்கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. பொறியாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் பக்தர்களின் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ரோப் காரில் மேலே செல்ல நான்கு பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. பெட்டிக்கு மூன்று பேர் வீதம் 12 நபர்கள் அதே சமயத்தில் நான்கு பெட்டிகளில் 12 பேர் கீழே இறங்க முடியும். இதில் ஒரு நாளில் 2000 க்கு மேற்பட்டோர் எளிதாக பயணம் செய்யலாம். அதனை தொடர்ந்து நேற்று (ஆக.20) சிறப்பு பூஜைகள் நடைபெற்றன அதன் பின் பக்தர்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டது.