திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளை சாத்தி கோலத்தில் சண்முகர் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2025 10:08
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா 8ம் நாளான இன்று காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்ம அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழா நாட்களில் சாமி தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏழாம் நாளில் சுவாமி ஆறுமுக நயினார் பிள்ளையான் கட்டளை மண்டகப் படியில் இருந்து தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆவணி திருவிழா 8ம் நாளான இன்று காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்ம அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.