ஆவணி அமாவாசை; பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் திதி கொடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2025 10:08
கோவை ; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
பேரூர் நொய்யல் படித்துறையில், ஆவணி அமாவாசையை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் மூதாதையருக்கு திதி கொடுத்து, சிறப்பு வழிபாடு செய்தனர். எள், அரிசி, பழத்துடன் பிண்டம் வைத்து, புரோகிதர் முன்னிலையில் சிறப்பு வழிபாடு செய்தனர். தங்கள் முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை வைத்து அவர்களை நினைத்து வணங்கினர். பின்னர், ஏழை எளியோருக்கு அன்னதானம், பசுக்களுக்கு அகத்திக்கீரைகளை வழங்கினர். தொடர்ந்து, பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று, நெய் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.