புவனேஸ்வரி அம்மன் கோயில் ஆவணி பொங்கல் பால்குடம் திருவிழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2025 11:08
தேவகோட்டை; தேவகோட்டை புவனேஸ்வரி அம்மன் கோயிலின் ஆவணி பொங்கல் விழா கடந்த 15 ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தினமும் புவனேஸ்வரி அம்மன் மீனாட்சி, அன்னபூரணி என வெவ்வேறு அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்தார். பெண்கள் விளக்கேற்றி விளக்கு செய்தனர். நிறைவு நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடனாக அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை தரிசனம் செய்தனர். இரவு ஏராளமான பக்தர்கள் பூக்கள் எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர்.