பழநி முருகன் கோயில் பணிகளை முதல்வர் துவங்கி வைத்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2025 11:08
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பஞ்சாமிர்த விற்பனை நிலையம் திறப்பு விழா, பழநி சித்த மருத்துவக் கல்லூரி, சுற்று சுவர் கட்டுவதற்கான பணி ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பழநி முருகன் கோயில் மேற்கு கிரிவீதியில் வின்ச் ஸ்டேஷன் எதிர்புறம் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் பெருந்திட்ட வளாக பஞ்சாமிர்த விற்பனை நிலைய புதிய கட்டிடம் அமைக்கப்பட்டது.ரூ. 1.22 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விற்பனை நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். முதல் விற்பனையை கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து துவங்கி வைத்தார். அதேபோல் பழநி, சிவகிரிபட்டி, சித்தா நகர் பகுதியில் சித்த மருத்துவ கல்லூரி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்ட அடிக்கல் நாட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார். இதில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேஷ், உதவி கமிஷனர் லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.