மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2025 11:08
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை யை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பால் பன்னீர் தயிர் சந்தனம் முதலான வாசனை திரவியங்கள் கொண்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு அபிஷேகமும் செய்யப்பட்டது. அதன் பின் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் சர்க்கரைப் பொங்கல் சுண்டல் உள்ளிட்ட படையலுடன் அங்காளம்மனுக்கு நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் உற்சவர் அங்காளம்மன் ஸ்ரீ குமார கணநாத அம்பாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அம்மனுக்கு உகந்த ஆவணி அமாவாசை தினத்தில் பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் நள்ளிரவு வடக்கு வாசல் எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மனை மேளதாளங்கள் முழங்க பூசாரிகள் தோளில் சுமந்து வந்து ஊஞ்சல் மண்டபத்தில் அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடினர் அச்சமயம் எதிரில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். இந்நிகழ்வை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் அங்காளம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.