புதுச்சேரி: முத்தியால்பேட்டை முத்துரட்சக மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, காங்., மாநில செயலாளரும், ஈரம் பவுண்டேசஷன் நிறுவனர் நன்கொடை வழங்கினார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை செவராய நகர், நாலு மூலை சுமைதாங்கி கோவிலில் உள்ள மவுனகுரு தேவராசு சுவாமிகள் சித்தர் பீடம், முத்துரட்சக மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா வரும் 4ம் தேதி நடக்கிறது.
இதனை முன்னிட்டு புதுச்சேரி மாநில காங்., செயலாளரும், முத்தியால்பேட்டை தொகுதி பொறுப்பாளர் மற்றும் ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ஈரம் ராஜேந்திரன் கோவில் திருப்பணிக்காக ரூ. ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கினார். இதில் முத்தியால்பேட்டை காங்., தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் ஈரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.