மேலுார்: மதுரையில் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழாவில் பங்கேற்க, திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் இருந்து மாணிக்கவாசகர் நேற்று காலை புறப்பட்டார். இன்று (செப்.2 ) நரியை பரியாக்கிய திருவிளையாடல், செப். 3 பிட்டுக்கு மண் சுமப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். பின்பு செப். 11 ல் திருவாதவூர் கோயிலுக்கு திரும்புகிறார். இதற்கான ஏற்பாடுகளை இணை, உதவி ஆணையர்கள் கிருஷ்ணன், லோகநாதன், பேஷ்கார் ஜெயபிரகாஷ் செய்திருந்தனர்.