விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் 49வது திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இங்கு செப். 8ல் திருவிழா தேர் பவனி நடக்கிறது.
நேற்று முன்தினம் பாதிரியார் பீட்டர் ராய், உதவி பாதிரியார் தேவராஜ் முன்னிலையில் மதுரை தொன்போஸ்கோ தொழிற்பயிற்சி கல்லுாரி முதல்வர் பிரின்ஸ் ராஜா, சதங்கை கலைத்தொடர்பு மையம் இயக்குனர் அலெக்ஸ் ஞானராஜ் ஆகியோர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் உருவம் பொறித்த கொடியை ஏற்றி துவக்கி வைத்தனர்.
அதன் பின் திருப்பலி, மறையுரை நடந்தது. 9 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினசரி மாலை திருவிழா நவநாள், திருப்பலி, மறையுரை நடக்கிறது. விருதுநகர் இஞ்ஞாசியார் சர்ச் பாதிரியார் அருள்ராயன் தலைமையில் செப். 8ல் தேர் பவனி நடக்கிறது. ஆடம்பர கூட்டு திருப்பலி, மறையுரை முடிந்து கொடியிறக்கம் செய்து திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை பாதிரியார்கள் பீட்டர்ராய், தேவராஜ் ஆகியோர் செய்கின்றனர்.