ஸ்ரீவி., கிருஷ்ணன் கோயில் தெப்பத்தில் கிணறு: புனரமைப்பில் தென்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2025 01:09
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்குட்பட்ட கிருஷ்ணன் கோயில் தெப்பம் புனரமைப்பு பணியின் போது மையப் பகுதியில் பத்தடி ஆழமுள்ள கிணறு தென்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துார் அத்திகுளம் ரோட்டில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பூர ஏழாம் திருநாளன்று சயன சேவை நடக்கும். இக்கோயிலின் முன்புள்ள தெப்பம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சேதமடைந்து காணப்பட்டது. கடந்த மாதம் தெப்பம் புனரமைப்பு பணி துங்கியது. தெப்பத்தை துார்வாரும் போது மண் குவியல்களை அள்ள லாரிகள் செல்லும் போது மையப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அதனை தோண்டி பார்க்கும்போது சுமார் 10 அடி ஆழத்தில் ஒரு கிணறு தென்பட்டுள்ளது. தெப்பம் வறண்டு காணப்படும் நிலையில் நடுவில் உள்ள கிணற்றில் தண்ணீர் ஊறி வருகிறது. இது மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.