Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாமனரை உத்தமன், மாயன் என்று சொல்வது ... அங்காளபரமேஸ்வரி அம்மன், வாணி கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம் அங்காளபரமேஸ்வரி அம்மன், வாணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணம் பண்டிகை; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நேந்திரன் பழம் சமர்ப்பணம்
எழுத்தின் அளவு:
ஓணம் பண்டிகை; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நேந்திரன் பழம் சமர்ப்பணம்

பதிவு செய்த நாள்

04 செப்
2025
03:09

பாலக்காடு; ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் மூலவருக்கு, "காழ்ச்சகுலை சமர்ப்பணம் என்ற நேந்திரன் பழம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது.


கேரள மாநிலத்தில், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு உத்திராடம் நாளான இன்று காலை சிறப்பு தாழ்ச்சீவேலி என்ற செண்டை மேளம் முழங்க, யானை மீது உற்சவர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவில் தங்கக் கொடிமரம் கீழ், பக்தர்கள் மூலவருக்கு காணிக்கையாக, நேந்திரன் பழம் சமர்ப்பிக்கும் "காழ்ச்சகுலை சமர்ப்பணம் என்ற நிகழ்ச்சி நடந்தது. கோவில் மேல்சாந்தி பிரஹ்மஸ்ரீ கவபிரா மாறத்து மனை அச்சுதன் நம்பூதிரி, மூலவருக்கு முதல் பழ கொத்து காணிக்கையாக சமர்ப்பித்தார். இதையடுத்து, தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன், குழு உறுப்பினர்களான பிரஹ்மஸ்ரீ மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, மனோஜ், விஸ்வநாதன், கோவில் நிர்வாகி பிரமோத் ஆகியோர் பழ கொத்து காணிக்கையாக சமர்ப்பித்தனர். அதன் பின், பக்தர்கள் மூலவருக்கு பழ கொத்து காணிக்கையாக சமர்ப்பித்து வழிபட்டனர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தப் பழ கொத்து, திருவோணம் நாளான நாளை நடக்கும் "ஒண சத்யா என்ற சிறப்பு அன்னதானத்தில் பழம் பாயாசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளதாக தேவஸ்தானம் நிர்வாக குழுவினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar