அங்காளபரமேஸ்வரி அம்மன், வாணி கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2025 03:09
பரமக்குடி; பரமக்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன், வாணி கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. கோயிலில் செப். 2 காலை அனுக்கை, விநாயக பூஜையுடன் விழா துவங்கியது. அன்று மாலை தீர்த்த குடங்கள் யாகசாலை பிரவேசமாகி, இரவு முதல் காலை ஆக பூஜைகள் நடந்தது. செப். 3 காலை, இரவு 2 மற்றும் 3ம் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் துவங்கி மகா பூர்ணாகுதி நடந்தது. காலை 8:00 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகி விமான கலசங்களை அடைந்தன. 9:00 மணிக்கு மகா கும்ப அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மூலவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது. அனைவருக்கும் பிரசாதங்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. பரம்பரை அரங்காவலர் ஜீவானந்தம், திருப்பணி கவுரவ தலைவர் நாகரத்தினம், தலைவர் ஆடிட்டர் தினகரன், செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் பூமிநாதன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.